
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இத்தொடரில் வினோத், சிவன்யா பிரியங்கா, பிரேமி, அஷ்வந்த் திலக் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கணவனை இழந்த பெண்(செவ்வந்தி) வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
செவ்வந்தி தொடர் கிட்டதட்ட 900 எபிசோடுகளை கடந்து 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது. இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜூலை 12 ஆம் தேதி செவ்வந்தி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடருக்குப் பதில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
The popular series among fans, Chevvanthi serial ends this weekend.
இதையும் படிக்க: டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.