மகாநதி தொடரில் இணைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார்.
Swetha kumar
ஸ்வேதா குமார் படம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார்.

நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டு விடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்வேதா குமார், இந்த வாய்ப்பின் மூலம் முழுநேர நடிகையாக மாறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பிரலமான இவர், மகாநதி தொடரில் நடிப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், கதையில் புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

மிகுந்த உணர்வுப்பூர்வமான, யமுனா என்ற பாத்திரத்தில் நடிப்பதால், தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு ஸ்வேதாவிற்கு இத்தொடரில் அமைந்துள்ளது.

ஸ்வேதா குமார்
ஸ்வேதா குமார் இன்ஸ்டாகிராம்

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைஇரவு 7.30 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லட்சுமி பிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

இத்தொடரில் இருந்து நடிகை ஆதிரை விலகியுள்ளதால், யமுனா என்ற பாத்திரத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸ்வேதா குமார் இதயம் தொடரில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் கதை! மகளே என் மருமகளே!

Summary

The Instagram celebrity swetha kumar has joined idhayam serial, which is airing on Zee Tamil TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com