சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் கதை! மகளே என் மருமகளே!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் பாத்திரங்களை மையமாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி / வர்ஷினி
ரேஷ்மா பசுபுலேட்டி / வர்ஷினிபடம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் பாத்திரங்களை மையமாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்தில் மக்களின் ரசனைக்கு ஏற்ப முற்போக்காகவும் புதிய கதைக்களத்துடனும் தொடர்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாமியார் - மருமகள் உறவைப் பற்றிய கதை மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் மாமியாரால் அனுபவிக்கும் துயரங்களும் அதனை எதிர்கொள்ளும் திருப்பங்கள் மிகுந்த காட்சிகளாக மாமியார் - மருமகள் கதைகள் ஒளிபரப்பாகின.

ஆனால், தற்போது ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடர், மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியாரைப் பற்றியது. இந்தத் தொடருக்கு மகளே என் மருமகளே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

போஸ்டர்
போஸ்டர்

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த மகுவா ஓ மகுவா என்ற தொடரே தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார்
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார்

பாக்கியலட்சுமி தொடரில் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி, தொடர்ந்து எதிர்மறையான பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீதா ராமன், கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களிலும் அத்தகைய பாத்திரத்திலேயே நடிக்கிறார்.

இதனால், நேர்மறையான பாத்திரத்தில் ரேஷ்மாவின் நடிப்பைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!

Summary

After a long break, a new series focusing on mother-in-law and daughter-in-law roles will be aired on the serial again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com