நடிகர் ஜீவாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தவருக்கு கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், என்றென்றும் புன்னகை படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இறுதியாக, கடந்த 2024-ல் வெளியான பிளாக் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஜீவா தன் 46-வது படமாக பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று (ஜூலை 14) சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், திருப்பூர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இதையும் படிக்க: ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.