
நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த செவ்வந்தி தொடர் 900 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'செவ்வந்தி' தொடர், கணவனை இழந்த பெண்(செவ்வந்தி) வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தது.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடராகவும், டிஆர்பியில் முன்னணியிலும் இத்தொடர் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொடர், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நிறைவடைந்தது.
இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு, 900 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
செவ்வந்தி தொடர் நிறைவடைந்ததால், இத்தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நந்தினி தொடர் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழலில் ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் முடிக்கப்படும் நிலையில், செவ்வந்தி தொடர் 3 ஆண்டுகளுக்கு மேல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பானது, இத்தொடருக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 900 எபிசோடுகளுடன் நிறைவடைந்த செவ்வந்தி தொடர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.