நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் புரமோ குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.
இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.
தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருவதாகவும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-வது வாரம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எடுத்து முடிக்கப்பட்ட படத்திற்கான அறிவிப்பு விடியோவை முதலில் யூடியூபில் வெளியிடாமல் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். கூலி திரைப்படம் வெளியாகும் ஆக. 14 ஆம் தேதி எஸ்டிஆர் - 49 அறிவிப்பு விடியோ வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.