காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அட்லி - அல்லு அர்ஜுன் பட படப்பிடிப்பு அப்டேட்!

அட்லி படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Published On :

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.

படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை இன்று விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஜூன் 12) துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி பாணியில் உருவாகவுள்ளதால் படப்பிடிப்பிலும் பல விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.