பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

சூர்யா - 46

Published On :

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது கூட்டணியில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அவரது 46-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 11) வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

நடிகர் துனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் மீண்டும் லக்கி பாஸ்கர் படத்தின் தொழிநுட்பக் குழுவினர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.