நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இப்படத்திற்கு வேட்டைக் கருப்பன் எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு தயார் செய்துள்ளதாம். இதனை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது. அடுத்த சில நாள்களில் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பிசாசு - 2 எப்போது வெளியாகும்? மிஷ்கின் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் நடிக்கும் மேடி! போஸ்டர் வெளியீடு!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
இதயம் முரளி வெளியீட்டுத் தேதி இதுவா?

அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி இதுவா?
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

