நிறுத்துங்கப்பா! புகைப்படக்காரர்களால் ஆத்திரமான சமந்தா!

புகைப்படக்காரர்களால் நடிகை சமந்தா கோபமடைந்தார்...
actor samantha angry with photographers
சமந்தா
Published on
Updated on
1 min read

தன்னைச் சூழ்ந்த புகைப்படக்காரர்களிடம் நடிகை சமந்தா கோபமாக நடந்துகொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா நடிப்பில் பெரிதாக எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஆனாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்குள்ள நடிகையாகவே நீடிக்கிறார். முக்கியமாக, தமிழ் ரசிகர்கள் சமந்தாவை மீண்டும் தமிழ்ப் படங்களில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். அண்மையில் வெளியான சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்த சமந்தாவைச் சூழ்ந்த புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்தனர்.

இதனால், ஆத்திரமான சமந்தா அவர்களைப் பார்த்து, ‘தயவுசெய்து நிறுத்துங்கப்பா’ என்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் யூடியூப் மற்றும் பத்திரிகைத் துறையைச் சார்ந்த புகைப்படக்காரர்கள் பொதுவெளியில் தொந்தரவு செய்யும் விதமாக நடிகைகளைப் புகைப்படம் எடுத்து வருவது சர்ச்சையாகவே நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com