
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரு தொடர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற முத்தழகு, தென்றல் வந்து என்னைத்தொடும் ஆகிய இரு தொடர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகவுள்ளன.
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான தொடர்கள், மறுஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கமானதுதான். 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி, 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள், 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பான திருமதி செல்வம் போன்ற சில தொடர்கள் தற்போது வெவ்வேறு தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இவை அனைத்துமே குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பானவை. ஆனால், சமீபத்தில் நிறைவடைந்த தொடர், மறு ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த பெருமையை தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு ஆகிய இரு தொடர்களும் பெற்றுள்ளன. முத்தழகு தொடர் 2024ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் 2023ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்த இந்த இரு தொடர்களும், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன. இரு தொடர்களின் மறு ஒளிபரப்புநேரம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், மதிய நேரத்தில் இரு தொடர்களும் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இரு தொடர்களின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | அண்ணா தொடரில் இணையும் சின்ன மருமகள் நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.