
நடிகை இலியானா தனக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ளது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்த நடிகை இலியானா பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
அமெரிக்க நடிகர் மைகேல் டோலனை இலியானா கடந்த 2023-இல் திருமணம் செய்தார். பின்னர், அதே ஆண்டு ஆகஸ்டில் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனக்கு இரண்டாவது குழந்தை கடந்த ஜூன் 19ஆம் தேதி பிறந்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் இலியானா அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எங்களின் இதயம் நிறைந்துவிட்டது” எனக் கூறியுள்ளார். மேலும், அந்தக் குழந்தையின் பெயர் கீனு ரஃபி டோலன் என அறிமுகம் செய்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா இந்தப் பதிவில் இலியானாவுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ராவும் இலியானாவும் 2012-இல் வெளியான பர்பி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.
கடைசியாக 2024-இல் இலியானாவின் படம் வெளியானது. கடந்த அக்.2024-இல் தனது கற்பத்தை அறிவித்த நடிகை இலியானா பெரும்பாலும் புகைப்படங்களை பதிவிடாமலே இருந்தார்.
கடந்த மே மாதத்தில் இன்ஸ்டா ஸ்டோரியில் கேள்வி பதில் செஷனில் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்தார். அதில், “அன்பு என்பது மரியாதை, மகிழ்ச்சியைப் போலவே சம்பாதிக்க வேண்டும் எனக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
Ileana D’Cruz and her husband Michael Dolan have welcomed their second child, a baby boy- Keanu Rafe Dolan. The actress shared an adorable picture of the newborn baby!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.