
குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாக்காரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம் குடும்பஸ்தன்.
கடந்த ஜன. 24 அன்று வெளியான இந்தப் படம், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனின் வாழ்க்கையை நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: சூர்யா - 45: புகைப்படம் பகிர்ந்த ஆர்ஜே பாலாஜி!
மணிகண்டன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். வைஷாக் இசையமைத்துள்ளார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
இந்த நிலையில், குடும்பஸ்தன் திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.