ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா

திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார்.

News image

ஜோதிகா - படம்: இன்ஸ்டா / ஜோதிகா.

Updated On :11 மார்ச் 2025, 9:25 pm IST

திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார்.

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

46 வயதாகும் ஜோதிகா தற்போது ஹிந்தி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக ‘சைத்தான்’ என்ற ஹிந்தி படம் வெளியாகியது. தற்போது டப்பா கார்டெல் என்ற தொடர் வெளியாகியுள்ளது.

பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகா கூறியதாவது:

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பை வழங்கும் ஓடிடி

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை ஹிந்திக்கு கொண்டு வந்தது சைத்தான் படம். ஓடிடி தளத்தின் அசுர வளர்ச்சி பல மொழி நடிகர், நடிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து வயது பெண்களுக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

திரைப் பயணத்தில் நான் எதுவும் திட்டமிடவில்லை. அப்படியே போகிற போக்கில் செல்கிறேன். அப்படிச் செல்வதே அழகாக இருக்கிறது.

உண்மையான கதாபாத்திரங்களில் நடிப்பது கடினம். ஏனெனில் அந்தக் கதாபாத்திரங்களில் உங்களை நீங்களே பார்க்கலாம். உங்களால் முடிந்த அளவுக்கு என்னை நீங்கள் உண்மையாக உணரலாம். ஆனால், அது அரிதாகத்தான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன.

டப்பா கார்ட்டெல் அற்புதமான ரைட்டிங்

டப்பா கார்ட்டெலில் பல விதமான அடுக்குகள் உள்ளன. அது எழுதப்படுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது. கணபதி பூஜையில் தனியாக இருவர் மட்டுமே பிரேமில் இருப்போம். மொத்த இணையத் தொடரிலும் இது அரிதாக இருக்கும். திரையில் இருவர் மட்டுமே பார்க்கும்போது புல்லரித்தது.

நாங்கள் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். மிகப்பெரிய நடிகர்களின் படங்களும் நாங்கள் தனித்த முத்திரை பதித்துள்ளோம். தற்போது மேன்மையான பல கதைகள் சொல்லப்படுகின்றன. அது நிச்சயமாக வளர்ச்சிதான்.

எங்களது சௌகரியமான நிலையிலிருந்து வெளியேறி நாங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கிறோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.