மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்!

ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ்...

News image
Updated On :20 மார்ச் 2025, 11:19 am

நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்திற்குப் பின் ரஜினி இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் இருக்கும் புகைப்படத்தை ’பேட்ட, கூலி, ஜெயிலர்’ என சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூலி மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.