பாலிவுட் மோசமானது! நேரலையில் கண்ணீருடன் பேசிய இர்ஃபான் கான் மகன்!

நடிகர் பபில் கானின் விடியோ வைரலாகியுள்ளது...
பபில் கான்
பபில் கான்
Published on
Updated on
1 min read

நடிகர் பபில் கானின் நேரலை விடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கானும் நடிகராக இருக்கிறார். இவர் நடித்த ஃபரைடே நைட் பிளான் (friday night plan) உள்ளிட்ட படங்கள் பெரிய கவனங்களைப் பெறவில்லை என்றாலும் வளர்ந்துவரும் நடிகருக்கான படமாக அமைந்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரலை விடியோவில் பேசிய பபில் கான், “ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, ராகவ் ஜூயல், சித்தாந்த் சதுர்வேதி, அர்ஜுன் கபூர், அர்ஜித் சிங், ஆதர்ஷ் கவுரவ் உள்பட இன்னும் சிலரைப் பற்றி நீங்கள் அறிந்தகொள்ள வேண்டும் என விரும்பினேன். பாலிவுட் மிக மோசமானது.” எனப் பேசப் பேச கண்ணீர் விட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், பாலிவுட் சினிமாவில் நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்ததுடன் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் இதேபோல் பிரச்னைதான் கொடுக்கப்பட்டது என அந்த நடிகர்களுக்கு எதிராகக் கடுமையாக எதிர்வினையாற்றினர்.

மேலும் சிலர், பபில் கானுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்தனர். இளம் நடிகர்களின் பெயரை பொதுவெளியில் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பபில் கானின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், “பிறரைப் போன்றே பபில் கானுக்கும் கடினமான நாள்கள் இருந்திருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. அவரின் மனநலப் பயணம் குறித்த வெளிப்படையான பேச்சு பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றவை. அவர் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். விரைவில் மீண்டு வருவார். அந்த விடியோவில், நடிகர்கள் குறித்து அவர் பேச வந்தது அவர்களின் உண்மையான உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை மீதான மரியாதையே ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் விடியோவை வெளியிட்ட பபில் கான் சில மணி நேரங்களிலேயே அதை நீக்கினார். பின், விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த விடியோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் நான் அவர்களுக்கு ஆதரவாக பேசவே முயற்சி செய்தேன்” எனப் பபில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com