உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் குறித்து...

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் போஸ்டர்.

Published On :

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது.

நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள்’ நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் இன்றுமுதல் (மே.16 ) இந்தியா முழுவதும் வெளியானது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நல்ல வரவேற்பை பெற்றுவரும் டிடி நெக்ஸ் லெவல் வட இந்தியாவில் 150-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து முதல்முறையாக வட இந்தியாவில் வெளியாவது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கிசா - 47 பாடலில் பெருமாளைக் குறித்து எழுதப்பட்ட ‘கோவிந்தா கோவிந்தா’ எனும் வரி பிரபல பக்திப் பாடலின் ராகத்தைப் போன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தவதாகக் கூறி சர்ச்சை எழுந்த நிலையில் படத்தில் அதை நீக்கிவிட்டதாகப் படக்குழு கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.