முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது, விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளதுடன் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் பெரிதாக இருக்குமெனத் தெரிகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் விஜய்யின் இறுதியான படமென்பதால் மிகப் பெரியளவில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டுமே இப்படம் 1000 திரைகளில் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 17 வெளியீடாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி, அன்பே டயானா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இவை நல்ல விமர்சனங்களைப் பெற்றால்கூட பல திரைகளில் நீக்கிவிட்டு ஜன நாயகனை வெளியிடவே வாய்ப்புகள் இருக்கின்றன.
The film Jana Nayagan, starring Vijay, is expected to be released on 1,000 screens across Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










