மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகன்!

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார்.
இரட்டைக் குழந்தைகள், மனைவியுடன் சினேகன்
இரட்டைக் குழந்தைகள், மனைவியுடன் சினேகன் இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தனக்கு கொடுத்த அதே அன்பை தனது மகள்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடலாசிரியர், நடிகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்துகொண்டிருக்கும் சினேகன், 1995-ம் ஆண்டு பாடலாசிரியராகத் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள அவர், 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகப் பங்குபெற்ற அவர், இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டார்.

இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு சின்ன திரை நடிகை கன்னிகாவை சினேகன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சினேகன் - கன்னிகா தம்பதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

குடும்பத்துடன் சினேகன்
குடும்பத்துடன் சினேகன் இன்ஸ்டாகிராம்

இத்தனை நாட்களாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சினேகன், தற்போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, மகள்களையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

குடும்பத்துடன் சினேகன்
குடும்பத்துடன் சினேகன்இன்ஸ்டாகிராம்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

''எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.

வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள், காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன்.

இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு, எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சொல்வதெல்லாம் உண்மைக்கு போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com