ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விஜய் ஆண்டனியின் மார்கன் டிரைலர்!

மார்கன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு...

News image
Updated On :26 மே 2025, 12:19 pm

DIN

விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாகத் தனது 12-வது படமான ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.

அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் படத்தின் மீது ஆவலை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.