தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மெட்ராஸ் மேட்னி டிரைலர்!

மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது...

News image
Updated On :27 மே 2025, 12:39 pm

DIN

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “மெட்ராஸ் மேட்னி”.

இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் மே 23 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த வெளியீடானது தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூன் 6 ஆம் தேதியன்று ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சென்னையில் வாழும் நடுத்தர வர்க்க மனிதர்களின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.