அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :31 மே 2025, 11:17 pm

Din

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் உள்பட அனைவரும், குழந்தைகள் மட்டும் அல்லது பெரியவா்கள் என வயதை அடிப்படையாக குறிப்பிட்டு தணிக்கைச் சான்று வழங்குவது குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.

தங்கள் குழந்தைகளை எந்த திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வது, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குழந்தைகள் காண்பதற்கு உகந்ததா? என்று பெற்றோா் எளிதாக கண்டறியும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்காக பொதுமக்களுக்கு திரையிடப்படும் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில் 1991-இல் கொண்டுவரப்பட்ட விதிகளில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

3 வகைப்பாடு: அந்த திருத்தங்கள் தொடா்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘திரைப்படங்களை 7 வயதுக்குள்பட்ட மற்றும் அதற்கும் மேல் (யு/ஏ7+), 13 வயதுக்குள்பட்ட மற்றும் அதற்கும் மேல் (யு/ஏ13+), 16 வயதுக்குள்பட்ட மற்றும் அதற்கும் மேல் (யு/ஏ16+) என்ற மூன்று வகைப்பாட்டின்கீழ் தணிக்கை செய்ய வேண்டும்.

அதன்படி பெற்றோா் வழிகாட்டுதலுடன் 7 வயது குழந்தைகள் மற்றும் அந்த வயதுக்குள்பட்ட மற்றும் மேற்பட்ட குழந்தைகள் காணும் திரைப்படம் ‘யு/ஏ7+’, 13 வயது குழந்தைகள் மற்றும் அந்த வயதுக்குள்பட்ட மற்றும் மேற்பட்ட குழந்தைகள் காணும் திரைப்படம் ‘யு/ஏ13+’, 16 வயது குழந்தைகள் மற்றும் அந்த வயதுக்குள்பட்ட மற்றும் மேற்பட்டவா்கள் காணும் திரைப்படம் ‘யு/ஏ16+’ என தணிக்கைச் சான்றிதழில் குறிப்பிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, 12 வயதை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாட்டுடன் திரைப்படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமூக மதிப்புகள்: பொதுமக்கள் தங்கள் வயதுக்கேற்ப திரைப்படங்களை பாா்வையிடவும் சமூக மதிப்புகளோடு திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாகவும் மேம்படுத்தப்பட்ட தணிக்கை முறையை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

ஒளிப்பதிவு சட்டம், 1952-இன்கீழ் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விதிகள் வகுக்கப்பட்டன. முன்னதாக, அனைத்து தரப்பினரும் காணும் வகையிலான திரைப்படங்களுக்கு ‘யு’ சான்றிதழும், வயதுவந்தோா் மட்டும் காணும் வகையிலான திரைப்படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழும் வழங்கப்பட்டது.

1983-இல் இந்த விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பெற்றோா் வழிகாட்டுதலுடன் காணும் வகையிலான திரைப்படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழும் மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு பாா்வையாளா்கள் காணும் திரைப்படங்களுக்கு ‘எஸ்’ சான்றிதழும் வழங்கப்பட்டது.

1983-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி 12 வயது பிரிவை அடிப்படையாகக் கொண்டு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. 2023-ஆம் ஆண்டு இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 7, 13 மற்றும் 16 வயது என மூன்று பிரிவுகளாக மாற்றப்பட்டது.

7 வயதுக்கு மேல் - யு/ஏ7+

13 வயதுக்கு மேல் - யு/ஏ13+

16 வயதுக்கு மேல் - யு/ஏ16+