கிரண் அப்பாவரம் - யுக்தி தரேஜாவின் கே-ராம்ப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயின்ஸ் நானி இயக்கத்தில் கிரண் அப்பாவரம் - யுக்தி தரேஜா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் கே-ராம்ப்.
இந்தத் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஹாஸ்யா மூவீஸ், ருத்ரான்ஷ் செல்லுலாய்டு ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு, சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சாய்குமார், நரேஷ் விஜயகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் காதல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கே-ராம்ப் திரைப்படம் வரும் நவ. 15 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கனகா - ஸ்ரேயா நடனமாடிய பாடல்!
K-Ramp movie OTT release date
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

