ஜன நாயகன் இசை வெளியீட்டில் இணையும் பிரபலங்கள்!

ஜன நாயகன் இசை வெளியீட்டில் பாடவுள்ள பிரபலங்கள்....
ஆண்ட்ரியா, விஜய், யோகி பி
ஆண்ட்ரியா, விஜய், யோகி பி
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பிரபல பாடகர்கள் கலந்துகொள்கின்றனர்.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிகழ்வில் விஜய், எச். வினோத், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதால் ஏராளமான தமிழர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் 35 ஹிட் பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதாம். இதற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ. 2200-லிருந்து ரூ. 14,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில், விஜய்யின் பிரபலமான பாடல்களைப் பாட நடிகை ஆண்ட்ரியா, பாடகர்கள் விஜய் ஜேசுதாஸ், யோகி பி, ஹரிஷ் ராகவேந்திரா, சரண், சைந்தவி, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு விடியோவாக வெளியிட்டு தெரிவித்து வருகிறது.

Summary

popular singers will joins jana nayakan audio launch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com