நடிகர் ஆதி மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெய்யழகன் திரைப்படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவான வா வாத்தியார் விரைவில் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி - 2 திரைப்படத்தில் கார்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தகவல் வெளியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்த நிலையில், மார்ஷலில் நடிகர் ஆதி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக, ஆதி சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, கார்த்தியுடன் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?
actor aadhi in karthi's marshal movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

