தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!

நடிகர் மோகன் லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறித்து...

குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மோகன் லால் - படம் / நன்றி - டிடி நேஷனல்

Published On :23 செப்டம்பர் 2025, 6:20 pm IST

வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் இன்று (செப். 23) பெற்றுக்கொண்டார்.

71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. இதில், தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கி வருகிறார்.

தேர்வான கலைஞர்கள் விருது பெற்று வரும் நிலையில், சினிமாவில் செய்த பணிகளைப் பாராட்டி, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மோகன் லால்

குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மோகன் லால்

அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார்.

Summary

Mohanlal receives Dadasaheb Phalke Award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.