மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

100 புதுமுக நடிகர்கள்... மீண்டும் இயக்குநரான ஜோஜூ ஜார்ஜ்!

ஜோஜூ ஜார்ஜ் இயக்கும் புதிய படம் குறித்து....

News image

ஜோஜூ ஜார்ஜ்

Updated On :18 ஏப்ரல் 2026, 4:51 pm IST

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீண்டும் இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசஃப், இரட்டா படங்களின் மூலம் அபாரமான நடிப்புத் திறன் கொண்டவர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முக்கியமாக, நடிகர் கமல் ஹாசனும் ஜோஜூ நடிப்பைப் பாராட்டியது பெரிதாகக் கவனிக்கப்பட்டது.

ஜோஜூ இயக்கிய பனி திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. இன்றும் பனி திரைப்படத்தைப் பாராட்டி கருத்துகள் பகிரப்படுகின்றன.

இந்த நிலையில், ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, 100 புதுமுக நடிகர்களை ஜோஜூ அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர, கதாபாத்திர தேர்வுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.

படத்தின் படப்பிடிப்பு கேரளம் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2018, ரேகா சித்திரம், ஆடு - 3 ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த காவ்யா பிலிம் கம்பெனி நிறுவனம் இப்படத்தைப் பெரிய பொருள்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Joju George is set to direct a new film once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.