யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

முதல்முறையாக இணையும் அஜித் குமார் - ஷங்கர் கூட்டணி?

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஷங்கர் கூட்டணி முதல்முறையாக இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

அஜித் குமார் - ஷங்கர்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:37 pm IST

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஷங்கர் கூட்டணி முதல்முறையாக இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைகிறார்.

இப்படத்திற்கு டேர் டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகையும், அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இதனைத் தொடர்ந்து, கிளாடியேட்டர்ஸ் என்ற படத்திலும் அஜித் நடிக்கிறார். அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றிய ஆவணப்படமாக உருவாகும் இதை இயக்குநர் விஜய் இயக்குகிறார்.

இதற்கு அடுத்ததாக, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைத் தந்த படமான மங்காத்தா-வின் இரண்டாவது பாகத்தில் அவர் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் 2027-ல் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கருடன் அஜித் முதல்முறையாக இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டேர்டெவில், மங்காத்தா 2 ஆகிய படங்களை முடித்த பிறகு இப்படம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் 2 & கேம்சேஞ்சர் படங்களின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படத்தை இயக்குவதாக இருந்தார்.

ஆனால், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமென்பதால் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆர்வம் காட்டாத நிலையில் அஜித்துடன் இணைந்து விரைவாக ஒரு படத்தை எடுத்து முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கதை மற்றும் பட்ஜெட் ஒத்துவரும் பட்சத்தில் ஷாலினி தயாரிப்பிலேயே இந்தப் படமும் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

According to reports, actor Ajith Kumar-director Shankar alliance will join forces for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.