ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ராம் இன் லீலா படத்தில் நடிகர் ரியோ கதாநாயகனாக நடிக்கிறார். இதில், நாயகியாக அறிமுக நடிகை வர்திகா நடிக்கின்றார்.
ரியோ கடைசியாக நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைம் தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம் இன் லீலா படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் வருகிற ஆக. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
Trailer announcement for the film Ram in Leela starring Rio
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா வெளியீட்டுத் தேதி!

செப்பு செல... ராம் அண்ட் லீலா புதிய பாடல்!

ரியோவின் ராம் அண்ட் லீலா ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

நடிகர் ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா அப்டேட்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


