நடிகை தமன்னா தனக்கு கவர்ச்சி நடன வாய்ப்புகள்தான் வருகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
’மில்க் ப்யூட்டி’ என ரசிகர்களால் அழைக்கபடும் தமன்னாவுக்கு இந்தியளவில் ரசிகர்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் கலக்கியவர் தற்போது ஹிந்தித் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் அவரது சிறப்பு நடனக் காட்சிகள் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.
குறிப்பாக ஆஜ் கி ராட், காவாலா, நஷா உள்ளிட்ட பாடல்களில் தமன்னா நடனம் அதிகம் வைரலாகின. கடைசியாக இவர் நடிப்பில் ஒடேலா 2 வெளியானது. தற்போது, இவர் மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை தமன்னா, “எனக்கு கவர்ச்சி நடனமாடவே இப்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நான் சவாலான கதாபாத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். கவர்ச்சியைத்தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுக்காகக் காத்திருக்கிறேன். அதற்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். திரைப்படத்தில் முத்தக்காட்சியின் தேவை இருந்தால், அதனை வைக்கலாம். அதேநேரம், அதனை மட்டும் தனித்துவமாக பார்ப்பதோ அல்லது தவறான முறையில் மதிப்பிடக்கூடாது” எனக் கூறியுள்ளார்.
Actress Tamannaah has expressed disappointment that she is only receiving offers for glamorous dance numbers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை அனன்யா ராஜ் காலமானார்!

எளிமையான மேக்அப் -யை விரும்புகிறேன்! அழகின் ரகசியம் பற்றி நடிகை ஷ்ரத்தா கபூர்
நடிகை ஷகிலாவுக்கு என்ன ஆச்சு? கழுத்தில் அறுவைச் சிகிச்சை! செல்போன் காரணமா?

போலி புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம்: தமன்னா
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!




