பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

உள்ளாடை மட்டுமே அணிந்து சண்டைக்காட்சி... விளாசிய ராதிகா ஆப்தே!

கவர்ச்சியாக நடிப்பது குறித்து ராதிகா ஆப்தே பேச்சு...

ராதிகா ஆப்தே

Published On :

நடிகை ராதிகா ஆப்தே சினிமாவில் கவர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட் பட உலகில் ராதிகா ஆப்தேவின் படங்களுக்கும் கருத்துகளுக்கும் தனி ரசிகர்களே உண்டு. 

பெண்ணியம் மற்றும் அரசியல் பார்வைகளைக் குறித்து அதிரடியாக பேசுபவர். மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடரும் வெளியானது. இதிலும், சர்ச்சையான கதையில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே, ”ஒரு நடிகர் நெருக்கமான மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் முன்பு நடித்திருக்கிறார் என்பதற்காக மட்டும் அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கக் கூடாது. படத்தின் வெற்றிக்காக நடிகர்களின் எல்லையையும் தனிப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி அழுத்தம் கொடுப்பது தவறு. சில திரைப்படங்களில் கதைக்கு தொடர்பில்லாத வகையில் நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு என்னை வற்புறுத்தியுள்ளனர்.

முக்கியமாக, ஒரு திரைபடத்தில் நடித்த போது, சண்டைக் காட்சிகளில் உள்ளாடை மட்டும் அணிந்து நடிக்க முடியுமா என்று கேட்டனர். இதனால் நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? என நினைத்துக்கொண்டு முடியாது என உறுதியுடன் மறுத்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Radhika Apte has spoken about glamour in cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.