உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஓடிடியில் கண் இமைக்காமல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்!

ஓடிடியில் காண வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள் குறித்து....

News image

ஓடிடியில் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்! - படம்: எக்ஸ்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:59 pm IST
Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:59 pm IST

ஓடிடி காண வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1மகாராஜா

Listicle image

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா, மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2ராட்சசன்

Listicle image

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன்.

இந்தப் படத்தை அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் தளங்களில் காணலாம்.

3மாநாடு

Listicle image

நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்

4தெகிடி

Listicle image

அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி.

அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

5துருவங்கள் பதினாறு

Listicle image

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு படம், ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராகவன், அஸ்வின் குமார், யாஷிகா ஆனந்த், பாலா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

6துப்பறிவாளன்

Listicle image

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.

இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் தளங்களில் காணலாம்.

7சைக்கோ

Listicle image

மிஷ்கின் இயக்கியிருந்த சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அதிதி ராவ், நித்யா மெனன், ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

8தம்பி

Listicle image

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல், சத்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தம்பி.

இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் பார்க்கலாம்.

9குரங்கு பொம்மை

Listicle image

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் குரங்கு பொம்மை.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 தளங்களில் காணக் கிடைக்கிறது.

10விக்ரம் வேதா

Listicle image

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.

இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

Summary

Let's take a look at the suspense thriller movies worth watching on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.