புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நல்ல கதைகளைத் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள்: தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி

தமிழ் சினிமா குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் பேச்சு...

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்

Published On :

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்பதற்கு சான்றாக இந்த வருடம் வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. உதாரணமாக ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். பான் இந்திய அளவில் பிரம்மாண்டமான திரைப்படங்களையும், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைகளையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

பெரும் பொருள்செலவில் உருவாகியுள்ள ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தமிழ்த் திரைப்படமான ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகிறார். ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே கொண்டாடுவார்கள். குறிப்பாக, இந்த ஆண்டு வெளியான ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ போன்ற நல்ல திரைப்படங்களுடன் ரசிகர்கள் தங்களை பொருத்தி கொண்டதால் வரவேற்பைப் பெற்றன. ஒரு தயாரிப்பு நிறுவனமாக, பிரம்மாண்டமான பான் இந்திய வெற்றிப் படங்கள் முதல் குடும்பம், உணர்வுகள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான சினிமாவை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையிலிருந்துதான் ‘மொத ராத்திரி’ திரைப்படம் உருவாகியுள்ளது” என்றனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது, 'மொத ராத்திரி’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ராஜா தனது தெளிவான அணுகுமுறை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றால் எங்களை மிகவும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதத்திலிருந்து, படப்பிடிப்புத் தளத்தில் அவர் செயல்பட்ட விதம் வரை, ஒரு அறிமுக இயக்குநருக்குரிய அனுபவத்தைத் தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். திட்டமிட்ட காலத்திற்குள் அவர் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர்.

The producers of Mythri Movie Makers have spoken about Tamil cinema fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.