

பிரபல மலையாள நடிகர்கள் பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடிக்கும் “அதிரடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசில் ஜோசப் இயக்கி நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாக நடித்து வெளியான “மின்னல் முரளி” திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் அருண் அனிருதன் இயக்கத்தில் “அதிரடி” எனும் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது.
இந்தப் படத்தில், பாசில் ஜோசப் மற்றும் டோவினோ தாமஸ் நடிகர்களாக மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், பிரபல இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாசில் ஜோசப் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைக்கின்றார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகும் “அதிரடி” படம் வரும் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.