தெலுங்கு மாநிலங்களில் வரலாறு படைத்த சிரஞ்சீவியின் புதிய திரைப்படம்!

நடிகர் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் நிகழ்த்திய சாதனை குறித்து...
Shine_Screens
சிரஞ்சீவியின் எம்எஸ்விபி பட போஸ்டர். படம்: எக்ஸ் / ஷைன் ஸ்கிரீன்ஸ்.
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபி (மன ஷங்கர வர பிரசாத் காரு) திரைப்படத்தின் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் ஐந்தாம் நாளில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படமாக இந்தப் படம் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.

அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜன.12ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நகைச்சுவை, சென்டிமென்ட் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் பிரபாஸ் படத்தினை விட நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஐந்து நாளில் உலக அளவில் இந்தப் படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

நான்கு நாளில் ரூ.190 கோடி வசூலிக்க, ஐந்தாம் நாளில் மட்டுமே ரூ.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு திரைப்படம் ஐந்தாம் நாளில் இந்த வசூலை அளித்து மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீப காலங்களில் ஹிட் அடிக்காமல் இருந்த சிரஞ்சீவிக்கு இந்தப் படம் மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Shine_Screens
அஜித்துக்கு எதிராக திரும்பிய அஜித் ரசிகர்கள்!
Summary

Mana Shankara Varaprasad Garu set a new record as the ALL-TIME HIGHEST collected film on Day 5 in Telugu states.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com