25-வது நாள்! சிறைக்கு இது நடந்திருக்கலாம்!

சிறை திரைப்படம் குறித்து....
25-வது நாள்! சிறைக்கு இது நடந்திருக்கலாம்!
Updated on
1 min read

சிறை திரைப்படம் திரையரங்குகளில் 25 நாள்களைக் கடந்துள்ளது.

நடிகர்கள் விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார், அனிஷ்மா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது.

சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்று வெற்றியும் பெற்றனர்.

ஆனால், இப்படம் வணிக ரீதியாக ரூ. 18 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமர்சகர்களால் 2025 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் குறைந்தது ரூ. 50 கோடி வசூலையாவது அடைந்திருக்கலாம் என்றும் அப்படி நடந்திருந்தால் சிறிய பட்ஜெட் படங்களின் மீது தயாரிப்பாளர்களுக்கு கவனம் அதிகரித்திருக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும், இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்திருக்கலாம் என்றும் ஆதங்க பதிவுகள் தென்படுகின்றன.

25-வது நாள்! சிறைக்கு இது நடந்திருக்கலாம்!
மோகன் ஜி-க்காக தெறி மறுவெளியீட்டுத் தேதியை மாற்றிய தாணு!
Summary

sirai movie completed 25th day in theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com