

இயக்குநர் மோகன் ஜியின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பாளர் தாணு மாற்றியுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான திரௌபதி - 2 திரைப்படம் வருகிற ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அன்றைய நாளே நடிகர் விஜய்யின் தெறி திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டிருந்தார்.
ஜன நாயகன் வெளியாகாததால் நிச்சயமாக தெறிக்கு வரவேற்பு இருக்கும் என்பதால் இயக்குநர் மோகன் ஜி எக்ஸ் பக்கத்தில், “புதிய திரைப்பட தயாரிப்பாளர்களும் வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர் தாணு பல நலவுதவிகளைச் செய்திருக்கிறார். திரௌபதி - 2 ஜன. 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்றே தெறி திரைப்படம் மறுவெளியீடாகிறது. தாணு சார், எங்கள் திரைப்படத்திற்கு பெரிய திரைகள் கிடைக்க வேண்டுமென்றால் தெறி வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை” எனப் பதிவிட்டார்.
இதனைக் கண்ட தாணு, “புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி” எனக் கூறினார்.
இதனால், தெறி வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதேநேரம், திட்டமிட்டபடி திரௌபதி - 2 திரைக்கும் வருகிறது.
தாணு செய்த இந்த உதவியைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை நேரில் சந்தித்து, அவரது ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.