சமூக வலைதளங்களில் வெளியான ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக சில கவனங்களைப் பெற்றது.
சாதாரண கதையாக இல்லாமல், நவீன ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் என வித்தியாசமான கதைகளைக் கொண்டு அப்படத்தை உருவாக்கியிருந்தார்.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இதில், பிரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முக்கியமாக, நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிகர்கள் பின் செல்லும் இளைஞர்களைச் சரமாரி கேள்வி கேட்கும் காட்சிகளும் தம்பி ராமைய்யா ஆடை சுதந்திரத்தைப் பற்றி பேசும் காட்சிகளும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.