இசையமைப்பாளர் இளையராஜா 1976 - 2001 காலகட்டத்தில் இசையமைத்த படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அவரின் இசையமைப்பில் வெளியான பல்வேறு பாடல்களை இளம் இசையமைப்பாளர்கள் ரீமேக் செய்து வருகின்றனர்.
அவ்வாறு ரீமேக் செய்யப்படும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோரி வந்தார்.
இந்த நிலையில், சரிகமா நிறுவனத்திடம் காப்புரிமை இருக்கும் படங்களின் பாடல்களுக்கும் இளையராஜா உரிமை கோருவதாகவும், அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த புகாரில், ”1976 - 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையைப் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்து பெற்றுள்ளது. ஆகையால், தங்கள் நிறுவனத்தின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோரவும், பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிடுமாறு” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காப்புரிமைச் சட்டம் 1957-ன்படி, ஒரு படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு, அந்த படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்ற வாதத்தையும் முன்வைத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரிகமா காப்புரிமை வைத்திருக்கும் படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாக பயன்படுத்தவும், பிறருக்கு காப்புரிமை வழங்கவும் இடைக்காலத் தடை விதித்து, கடந்த பிப். மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், காப்புரிமைச் சட்டம் 1957-ன்படி, பாடல்களின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், 1976 - 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான படங்களின் பாடல்களை வணிக ரீதியில் பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமை வழங்கவோ, உரிமை கோரவோ இளையராஜாவுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
Ilaiyaraaja restrained from claiming rights to songs from 134 films!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரிகம நிறுவனத்திற்கு சாதகமாகத் தீர்ப்பு! மேல்முறையீடு செய்வாரா இளையராஜா?

இளையராஜா எழுதிய ஏடேறும் எழுத்து நூல் வெளியீடு!

இளையராஜாவுடன் இணைந்த முன்னணி இயக்குநர்கள்!

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS




