பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இளையராஜாவுடன் இணைந்த முன்னணி இயக்குநர்கள்!

இளையராஜா இசையமைக்கும் படங்கள் குறித்து...

Music Composer Ilaiyaraaja; Directors Karthik Subbaraj, Thiagarajan Kumararaja, and Mari Selvaraj.

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தியாகராஜன் குமாரராஜா, மாரி செல்வராஜ்

Published On :

இசையமைப்பாளர் இளையராஜா அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அன்னக்கிளி மூலம் அறிமுகமானவர் பல நூற்றுக்கணக்கான இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டார். 1540 படங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் என இசையுலகில் மாபெரும் கலைஞர் என்ற புகழுடனே நீடிக்கிறார்.

இடையே, வாலியண்ட் என்கிற சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது, இரண்டாவது சிம்பொனி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இருந்தும், பல ரசிகர்களுக்கு இன்றைய இளம் இயக்குநர்கள் ஏன் இளையராஜாவைப் பயன்படுத்துவதில்லை? அவர் இசையமைத்தால் இன்னும் சிறப்பான பாடல்கள் கிடைக்குமென ஆதங்கமும் இருந்தது.

தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இளையராஜாவைத் தங்கள் படங்களில் இசையமைக்க வைக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா பல நல்ல பாடல்களைக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பாக்கெட் நாவல் படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தன் 10-வது படத்திலும், மாரி செல்வராஜ் மஞ்சணத்தி என்கிற படத்திலும் இளையராஜாவுடன் இணைந்துள்ளனர். இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கதையமைப்பு மற்றும் பாணியில் உருவாகவுள்ளது கவனிக்க வேண்டியது.

தன் 83-வது வயதிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும் இளையராஜா, அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைவது ரசிகர்களிடம் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Music composer Ilaiyaraaja is set to compose music for films by leading directors, one after another.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.