தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 200% வெற்றி பெறும்! தயாரிப்பாளர் பேச்சு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி பேச்சு..

News image

சூர்யா, மமிதா பைஜூ - Instagram

Updated On :6 ஜூலை 2026, 1:05 pm IST

சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் வெளியாகும் சூர்யாவின் திரைப்படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், 40 வயது நாயகனுக்கும் 20 வயது நாயகிக்குமான காதல் கதையாக உருவாகியுள்ளதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி நிகழ்வு ஒன்றில் பேசியபோது, “நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன். இது கண்டிப்பாக 200 சதவீத வெற்றியைப் பெறும். குடும்ப படமாகவே உருவாகியுள்ளதால் ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

The film's producer has stated that Viswanath and Sons, starring Suriya, will achieve massive success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.