மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

புற்றுநோயுடன் போராடும் ’சொக்க தங்கம்’ படத்தின் நடிகை உமா சங்கரி!

நடிகை உமா சங்கரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

உமா சங்கரி - Instagram / Uma Shankari

Updated On :16 ஜூலை 2026, 11:25 am IST

சொக்க தங்கம் படத்தின் நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான வீரநடை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உமா சங்கரி, நடிகர் விஜயகாந்த்தின் சொக்கத் தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.

அதன்பின்னர், தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2006-ல் துஷ்யத் என்பவரை திருமணம் செய்த உமா சங்கரி, அதன்பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

இந்த நிலையில், தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உமா சங்கரி தெரிவித்துள்ளார். தற்போது புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் அவர் இருக்கிறார்.

சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை உமா சங்கரி தெரிவித்திருப்பதாவது:

”கடினமான நாள்களை எப்படிச் சமாளிப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும், வலிமையாக உணரும் நாள்களைக் கொண்டாடுகிறேன்.

எப்போதும் எனக்குத் துணையாக நிற்கும் என் குடும்பத்தினருக்கும், அன்பும் ஆதரவும் அளிக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி.

நான் என் பணிகளைத் தொடர்கிறேன், குணமடைகிறேன், மேலும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பதிவைத் தொடர்ந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Summary

'Chokka Thangam' actress Uma Sankari battling cancer!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.