அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

காதலருடன் நடிகை பிரிகிடா சாகாவுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை பிரிகிடா சாகா - நடிகர் ஆனந்த் நிச்சயதார்த்தம் பற்றி...

News image

நடிகை பிரிகிடா சாகா - நடிகர் ஆனந்த் நிச்சயதார்த்தம் - Instagram

Updated On :14 ஜூலை 2026, 11:47 am IST

நடிகை பிரிகிடா சாகாவுக்கு அவரது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஆஹா கல்யாணம் என்ற இணையத் தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. இதனைத் தொடர்ந்து, அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ’இரவின் பகல்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரிகிடா, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

Story image

தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே, கடந்த மாதம் நடிகர் ஆனந்த் என்பவரை தான் காதலிப்பதாக பொதுவெளியில் அறிவித்து புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

மீசைய முறுக்கு, நண்பன் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆனந்த்.

Story image

இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில், தற்போது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

புகைப்படங்களை பகிர்ந்து பிரிகிடா வெளியிட்ட பதிவில்,

“சில சமயங்களில், மிகச்சிறந்த காதல் கதைகள் பிரம்மாண்டமான திட்டங்களுடன் தொடங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் மனதார விரும்பும் இருவரிடமிருந்து அவை தொடங்குகின்றன.

Story image

இன்று, எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன், பாரம்பரிய முறைப்படி இருவரும் எங்கள் நிச்சயதார்த்த விழாவைக் கொண்டாடினோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், பிரிகிடாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Brigida Saga gets engaged to her boyfriend!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.