பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

நான் ராசியில்லாத நடிகையா? பதிலடி கொடுத்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தன் திரைப்பட வெற்றி குறித்து பேசியுள்ளார்...

News image

பாக்யஸ்ரீ போர்ஸ்

Updated On :21 ஜூலை 2026, 1:30 pm IST

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் திரைத்துறையில் ராசில்லாத நடிகை எனக் கூறுவதைக் கண்டிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பல படங்களில் வாய்ப்பைப் பெற்று வருகிறார்.

தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான எந்தத் திரைப்படமும் வணிக வெற்றியைப் பெறாமல் இருந்தது.

Story image

இந்த நிலையில், அவர் நடிப்பில் வெளியான லெனின் திரைப்படம் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், “சினிமா என்பது கூட்டுழைப்பு சார்ந்தது. அதில் வெற்றி கிடைத்தால் அனைவருக்குமானதுதான். ஆனால், தோல்வியடைந்தால் நடிகை ராசியில்லாதவர் என எப்படிச் சொல்ல முடிகிறது? என்னை ராசியில்லாத நடிகை எனக் கூறிய போது, அது காயத்தைத் தரவில்லை. மாறாக, குழப்பத்தைத்தான் கொடுத்தது. ஒரு திரைப்படத்தில் இயக்குநர், திரைக்கதை, நாயகன் எனப் பலர் சம்பந்தப்பட்டிருந்தாலும் தோல்விக்கு நடிகைகளைக் குற்றம்சாட்டுகின்றனர். தாப்ஸி, ஷ்ருதி ஹாசன், ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகைகள் ஆரம்பத்தில் தோல்விப்படம் கொடுத்து பின் தங்களுக்கான இடத்தைப் பிடித்தவர்கள்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Bhagyashree has spoken out to condemn the claim that she is an 'unlucky' actress in the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.