ஜன நாயகன் திரைப்படத்தின் இயக்குநர் எச். வினோத் சில ஊடகவியலாளர்கள், “செய்திகளை உருவாக்கி பரப்புகிறார்கள்: எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நடிகராக விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிக்க, எச். வினோத் இயக்கியிருந்தார்.
தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் இந்தப் படம் ஜனவரியில் வெளியாகவில்லை. பின்னர், தேர்தலுக்குப் பிறகு தணிக்கைப் பெற்று வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து சில ஊடகவியலாளர்கள் கரூரில் படப்பிடிப்பு நடத்தினார்கள் எனக் கூறிவந்தனர். இந்த சர்ச்சைக் குறித்து நேர்காணல் ஒன்றில் பதிலளித்த இயக்குநர் எச். வினோத் பேசியிருப்பதாவது:
பலரும் எனது மனைவியிடம் இது குறித்து கேட்டிருக்கிறார்கள். அரசியல் பிரசாரத்துக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடித்து விட்டோம். கரூரில் படப்பிடிப்பு எடுத்ததாக ஒரு ஊடகவியலாளர் அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் இதுவரை மன்னிப்புக் கூட கேட்கவில்லை.
முன்பெல்லாம் செய்தி என்பது சேகரித்து, அதனை வெளியிடுவார்கள். தற்போதெல்லாம் இவர்களே செய்திகளை உருவாக்கி வெளியிடுகிறார்கள். நான் ஊடகவியல் குறித்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தயாரிப்பாளர்கள் இந்தப் படம் வெளியாகாது எனக் கூறி நிராகரித்தார்கள். எனக்கும் சிறிய படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு சிஸ்டம் ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார்.
Summary
They create and spread News: Jana nayagan Director H. Vinoth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









