திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து...

News image

கருப்பு போஸ்டர் - படம் - எக்ஸ் (ஆர்.ஜே.பாலாஜி)

Updated On :29 ஜூலை 2026, 3:27 pm IST

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்தது. மேலும், ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சில திரையரங்குகளில் கணிசமான ரசிகர்கள் படத்தைப் பார்த்தனர்.

இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படம், நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, அமேசான் பிரைம் ஓடிடியில் கருப்பு திரைப்படம் காணக் கிடைக்கின்றது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் ஜீ தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று முன்னோட்டக் காட்சி வெளியிட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An announcement regarding the television broadcast of Suriya film Karuppu has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.