புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து சூர்யா பேசியது...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

Published On :

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்து என்ன சொன்னார் என்பதை இயக்குநர் கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.

அண்மையில், நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கில் பாடிய இப்படத்தின் 2-வது பாடலான வெட்டிங் சாங் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் வருகிற ஆக. 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “சூர்யா சார் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு இப்படம் முழு திருப்தியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் 9 வடிவங்களாக எழுதினேன். கிளைமேக்ஸும் மூன்று வடிவங்களில் இருந்தது. சூர்யா சார் தேர்ந்தெடுத்த கிளைமேக்ஸை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு இப்படம் பிடித்திருப்பதால் கருப்பைத் தொடர்ந்து வெற்றிப்படமாக மாறலாம் என்றே தெரிகிறது.

The director has revealed what actor Suriya said after watching the movie Viswanath & Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.