இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்! தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி!
/

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சீரியல்கள்!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் குறித்து...

News image

கண்மணி அன்புடன், சுட்டும் விழிச் சுடரே, தென்றலே மெல்லப் பேசு - இன்ஸ்டாகிராம்

Updated On :3 ஜூன் 2026, 4:42 pm IST

விஜய் தொலைக்காட்சியின் ஒருசில தொடர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற தொடர்கள் கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன. இதுமட்டுமின்றி, விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் சுட்டும் விழிச் சுடரே தொடரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

சுட்டும் விழிச் சுடரே

சுட்டும் விழிச் சுடரே - இன்ஸ்டாகிராம்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் சுட்டும் விழிச் சுடரே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வினுஷா தேவி, யுவன் மயில்சாமி, தன்ஷிகா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வரும் இத்தொடர், அம்மா, மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கண்மணி அன்புடன்

கண்மணி அன்புடன் - இன்ஸ்டாகிராம்

இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் சுட்டும் விழிச் சுடரே ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தென்றலே மெல்ல பேசு

தென்றலே மெல்ல பேசு - இன்ஸ்டாகிராம்

இதேபோன்று அதே கண்கள் (ஜெயா தொலைக்காட்சியில் முன்பு ஒளிபரப்பானது) தொடர் மாலை 6.30 மணிக்கும், மஹாபாரதம் இரவு 7.30 மணிக்கும், கண்மணி அன்புடன் தொடர் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

மேலும், தென்றலே மெல்லப் பேசு தொடர் இரவு 9 மணிக்கும், சுட்டும் விழிச் சுடரே தொடர் இரவு 9.30 மணிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

Vijay TV Serials Airing on Colors Tamil Mahabharatham Kanmani Anbudan Suttum Vizhi Sudare

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.