உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.175 கோடி வசூலித்த கருப்பு..! காட் மோட் பாடல் விடியோ வெளியீடு!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தினைக் குறித்து...

Posters of the movie *Karuppu*.

கருப்பு திரைப்படத்தின் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

Published On :

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.175 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு காட் மோட் என்ற பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், கருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதுவரை கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.175 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இத்துடன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் மிகவும் வரவேற்பைப் பெற்ற காட் மோட் எனும் பாடலின் விடியோவும் வெளியாகியுள்ளது.

Summary

Sai Abhyankkar‬ |God Mode - Video Song | Suriya's Karuppu | RJ Balaji 175 cr in Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.