இந்திய அளவில் அமேசான் பிரைம் டிரெண்டிங் பட்டியலில், லீடர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர், துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், லீடர் படத்தின் நடித்திருந்தார்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.

மேலும் இந்தப் படத்தில், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
லெஜெண்ட் சரவணா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘லீடர்’ திரைப்படம், கடந்த மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக, லீடர் திரைப்படம் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இதுவரையில் 5 கோடி நிமிட பார்வைகளைப் பெற்றுள்ளது.
Summary
The movie 'Leader' has secured the top spot on Amazon Prime's trending list in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






